நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தளவாய்புரம், : தளவாய்புரம் அடுத்த புத்துார் அருகே நேற்று முன்தினம் இரவு கோயில் திருவிழாவின் போது ஒரு தரப்பினர் வைத்திருந்த பிளக்ஸ் மீது அவ்வழியாக வந்த கார் மோதியதாக கூறி மற்றொரு தரப்பினர் வீடு புகுந்து தாக்கியதில் கருமலை பாண்டியன் 33, அவரது மனைவி கற்பகவல்லி 32, இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வீடு புகுந்து தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று சாலை மறியல் நடந்தது.
தளவாய்புரம் இன்ஸ்பெக்டர் ஆனந்தி பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார்.
சம்பவத்தில் ஈடுபட்டதாக இருதரப்பை சேர்ந்த 12பேர் மீது தளவாய்புரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

