தி.மு.க., ஒன்றிய செயலாளருக்கு மிரட்டல்
சாத்துார்: ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் 49. வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளராக உள்ளார். ஏப்.16ல் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று விட்டு திரும்பிய பின், எதிர்கோட்டையை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகி மணிகண்டன் என்பவர் இவரது அலைபேசியில் அழைத்து கனவு இல்லம்திட்டம் சம்பந்தமாக இனி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார் என கிருஷ்ணகுமார் போலீசில் புகார் செய்துள்ளார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
அரசு பஸ் - டூவீலர் மோதல் இருவர் காயம்
சாத்துார்: சாத்துார் மேல காந்தி நகர் சந்தன மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்19. இவரது தாய் சங்கரேஸ்வரி 42. இருவரும் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) படந்தால் நான்கு வழிச்சாலை சந்திப்பை நேற்று முன்தினம் இரவு 8:00 மணி கடந்த போது, கோவில்பட்டியைசேர்ந்த கருணாநிதி 42, ஓட்டி வந்த அரசு பஸ் டூவீலர் மீது மோதியது. தாய், மகன் காயம் அடைந்தனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

