நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் நத்தத்துபட்டியை சேர்ந்தவர் நல்லதாய், 40. அதே ஊரைச் சேர்ந்த தம்பதி பரமசிவம், மாரியம்மாள், ஆகியோரிடம் கைமாத்தாக ரூ 12 லட்சத்தி 60 ஆயிரம் கொடுத்தார். இருவரும் ரூ 4 லட்சத்தை திருப்பி கொடுத்து விட்ட நிலையில் பாக்கி தொகையை நல்ல தாய் கேட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த மாரியம்மாள் அவரது உறவினர் மூக்கம்மாள் ஆகியோர் பணத்தை தர முடியாது கேட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி அடித்து உதைத்தனர். காயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர்.