நாய்களுடன் வாக்கிங்; இருவருக்கு அடி உதை
விருதுநகர்: விருதுநகரில் வளர்ப்பு நாய்களை இரு தரப்பினர் வாக்கிங் கூட்டிச் சென்றபோது ஏற்பட்ட தகராறில் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.விருதுநகர் குப்பையா சந்தைச் சேர்ந்த அசோக்குமார் 42, பணியாளர் சேகர் ஆகியோர் வளர்ப்பு நாயுடன் வாக்கிங் சென்றனர். சிவன்கோவில் அருகே அதே பகுதியைச் சேர்ந்த சிவசங்கர், பாலகிருஷ்ணன், அழகேந்திரன், கண்ணன் ஆகியோர் மற்றொரு நாயுடன் வாக்கிங் வந்தனர்.அப்போது, நாய்கள் ஒன்றுக்கொன்று குரைத்தன. இதனால் அசோக்குமார் கல்லால் மற்றொரு நாயை விரட்டினார். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நான்கு பேரும் அசோக்குமார், சேகர் ஆகியோரை கடுமையாக தாக்கினர். பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் - வேன் மோதல்: ஒருவர் பலி
சாத்துார்: சாத்துார் தாயில்பட்டியை சேர்ந்தவர் அரவிந்த் பாலா 22. இவரது நண்பர் கிருபைதாஸ் 29. (இருவரும் ஹெல்மெட் அணியவில்லை) உடன் டூவீலரில் பின்னால் அமர்ந்து மடத்துப் பட்டி சென்றார். நேற்று மதியம் 12:30 மணிக்கு எதிரில் வந்த வேன் மோதியதில்இருவரும் படுகாயம் அடைந்தனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது அரவிந்த் பாலா ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. கிருபை தாஸ் சிகிச்சை பெற்று வருகிறார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

