நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எண்ணெய் சட்டியில் விழுந்துசமையல் மாஸ்டர் காயம்
விருதுநகர்: தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர் திவான் அலி 47, இவர் நேற்று அதிகாலை ஸ்ரீவில்லிபுத்துார் திருமண மண்டபத்தில் உணவு சமைக்கும் போது எண்ணெய் சட்டியில் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
காட்டுப்பன்றி மீது மோதியதில்ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலூகா அழகாபுரியை சேர்ந்தவர் முத்தையா 40. இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று முன் தினம் இரவு 9:15 மணிக்கு சவாரி ஏற்றுவதற்காக அரசபட்டி விலக்கு அருகே செல்லும்போது காட்டுப்பன்றி மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து உயிரிழந்தார். நத்தம் பட்டி போலீசார் விசாரித்தனர்.