பிளேடால் வெட்டிய முதியவர் கைது
சாத்துார்: துாத்துக்குடி மாவட்டம் கைலாசபுரத்தை சேர்ந்தவர் பொன்னையா 79. கூலித்தொழிலாளி. நேற்று முன் தினம் நென்மேனியில் உள்ள பெட்டிக்கடையில் நின்று கொண்டு அலைபேசியில் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார். அங்கு நகம் வெட்டிக் கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த வீரகுமார் 61, அலைபேசியில் ஏன் சத்தமாக பேசுகிறாய் எனக் கேட்டு கையில் வைத்திருந்த பிளேடால் பொன்னையாவின் கழுத்தை அறுத்தார். காயம் அடைந்த பொன்னையா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வீரகுமாரை இருக்கன்குடி போலீசார்கைது செய்து விசாரிக்கின்றனர்.
சரவெடி பறிமுதல்; ஆலைக்கு சீல்
சாத்துார்: ஏழாயிரம் பண்ணை சேர்வைக்காரன் பட்டி நித்தின் பட்டாசு ஆலையில் உரிமையாளர் வெம்பக்கோட்டை மல்லீஸ்வரி உத்தரவின் பேரில் பீட்டர் ஜேம்ஸ் 41, அறிவழகன் 44, ஆகியோர் சரவெடி தயாரித்தனர். போலீசாரை கண்டதும் அறிவழகன் தப்பினார். சரவெடிகளை போலீசார் பறிமுதல் செய்து பீட்டர் ஜேம்சை கைது செய்தனர். வருவாய்த் துறையினர் ஆலைக்கு சீல் வைத்தனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.