ADDED : ஜூலை 29, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலிபர் மாயம்
சாத்துார்: சாத்துார் மேலக்காந்திநகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி, 47. இவர் மகன் சித்தநாதன், 27.சித்தாளாக பணிபுரிந்து வந்தார். வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்து பணம் தராத அதை தாய் கண்டித்துள்ளார். ஜூலை 27 ல்வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றவர் மாயமானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தாயை தாக்கிய மகன் கைது
சாத்துார்: சாத்துார் ஆண்டாள்புரத்தை சேர்ந்தவர் சர்க்கரைத் தாய் ,57. இவரது மகன் கார்த்திக்,27. மது பழக்கத்திற்கு அடிமையானார்.நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு சர்க்கரை தாய் தன் மகள் பொன்னுலட்சுமி வீட்டில் இருந்தபோது அங்கு மது போதையில் வந்த கார்த்திக் பணம் கேட்டு தாயை அசிங்கமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். சாத்துார் போலீசார் கார்த்திக்கை கைது செய்து விசாரிக்கின்றனர்.