மூதாட்டியிடம் நகை பறிப்பு
சாத்துார்: ஏழாயிரம் பண்ணை தேவர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி ஜெயகுரு, 60. நேற்று முன் தினம் மதியம் மளிகை கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்ற போது டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் மூதாட்டி அணிந்திருந்த ஒரு பவுன் செயினை பறிந்து சென்றார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
சாத்துார்: சாத்துார் படந்தால் நேதாஜி நகரை சேர்ந்தவர் சிவா, 37. வீட்டில் வைத்து கஞ்சா விற்றார். போலீசார் அவரிடம் இருந்து 600 கிராம் கஞ்சா வை பறிமுதல் செய்து கைது செய்தனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தற்கொலை
சாத்துார்: வெம்பக்கோட்டை வல்லம்பட்டியை சேர்ந்தவர் சரவணன், 45. இவரது மூத்த மகன் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சிறுநீரக கோளாறில் சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால் மனவேதனை அடைந்த சரவணன் ஜூலை 29 ல் மதுவுடன் விஷமருந்தி மயங்கினார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஜூலை 30ல் பலியானார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.