அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பு இருவர் மீது வழக்கு
சாத்துார்: தாயில்பட்டி சத்யா நகரில் மண்டல துணை தாசில்தார் செல்வ பகவதி ,வருவாய் ஆய்வாளர் மாரீஸ்வரன், வி.ஏ.ஓ. கணேசன், தலைமையில் போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்தபோது அங்கு பணியில் இருந்த பணியாளர்கள் தப்பி ஓடினர். அதிகாரிகள் பட்டாசு திரி, 30 சாட் வெடி குழாய்கள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட சிவகாசியை சேர்ந்த வெள்ளைச்சாமி, தாயில்பட்டி கோட்டையூரை சேர்ந்த முத்துராமலிங்கம் ஆகியோர் மீது வெம்பக் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பெண் மாயம்
சாத்துார்: சாத்துார் முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் மனைவி வைஷ்ணவி, 25. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதே பகுதியில் வசிக்கும் தாய் சரினா, 48. வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு வைஷ்ணவி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. மாயமானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.