விபத்தில் வாலிபர் பலி
சாத்துார் : ஏழாயிரம்பண்ணை ஊத்துப் பட்டியை சேர்ந்தவர் அஸ்வின் குமார் 21. டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு ஏழாயிரம் பண்ணைக்கு வந்த போது எதிரில் வந்த இ.ராமநாதபுரம் சிவக்குமார் ஓட்டி வந்த டிராக்டர் மோதி விட்டு நிற்காமல் சென்றது. படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியில் பலியானார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு பறிமுதல்: 6 பேர் மீது வழக்கு
சாத்துார் : சாத்துார் வெற்றிலையூரணி மாரியம்மாள் பயர் ஒர்க்ஸ் அருகில் தகர செட் அமைத்து சோல்சா உருட்டு சில் வெடிகளை சிவகாசி ராஜா, கருப்பசாமி, மற்றும் 4 பேர் தயாரித்தனர். போலீசாரை கண்டதும் தப்பினர். பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளி பலி
சிவகாசி: சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன் 45. சித்துராஜபுரத்தில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். எம்.துரைச்சாமி புரத்தில் உள்ள பட்டாசு ஆலைக்கு சொந்தமான செட்டில் வெல்டிங் வேலை செய்த போது தீப்பொறி பறந்து கீழே விழுந்து காலி அட்டைப்பெட்டியில் தீ பிடித்து இவரின் மீது பரவியது. மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர். -----
எலும்புக்கூடு கண்டெடுப்பு
சிவகாசி: சாத்துார் ரோட்டில் காலி இடத்தில் மனித எலும்புக்கூடு கிடந்தது. கொலையா தற்கொலையா என கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
---- பட்டாசு ஏஜென்ட் பலி
சிவகாசி: விருதுநகர் சூலக்கரை பசும்பொன் நகரை சேர்ந்தவர் விக்னேஷ் 30. பட்டாசு ஏஜெண்டாக வேலை செய்து வரும் இவர் தனது டூவீலரில் நாரணாபுரம் அருகே சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
----- மதுபாட்டில்கள் பறிமுதல்
சிவகாசி: கட்ட சின்னம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி 65. இவர் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்தார் திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்து 30 மது பாட்டில்கள், டூவீலரை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற அதிவீரன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த தினேஷ் குமாரை 38 , போலீசார் கைது செய்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.----