நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விவசாயி பலி
சாத்துார் : தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தை சேர்ந்தவர் தினகரன், 36.விவசாயி. நள்ளி ராமமூர்த்தி தோட்டத்தில் உழவு செய்வதற்காக கோவில்பட்டி சாத்துார் ரோட்டின் ஓரத்தில் வைத்து நேற்று காலை 7:00 மணிக்கு டிராக்டரில் கலப்பையை மாட்டிக் கொண்டிருந்த போது திருநெல்வேலி மாவட்டம் குமராபுரம் வில்லியம் ஸ்டார்வின், 40.ஓட்டி வந்த கார் மோதியதில் தலையில் படுகாயம் அடைந்தார்.கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியில் பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
தற்கொலை
சாத்துார் : சாத்துார் வெங்கடாசலபுரம் என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்தவர் மாணிக்கம், 31. வேன் டிரைவர். செப்.25 இரவு 10:30 மணிக்கு வீட்டிற்கு மது போதையில் வந்தவர் துாக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.