தற்கொலை
சாத்துார் : சாத்துார் வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் எட்வின் இருதயராஜ் 27. படந்தாலை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக வீட்டில் கூறியுள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலைவிஷம் குடித்து பலியானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மினி பஸ் மீது கல்வீச்சு
சாத்துார் : ஏழாயிரம் பண்ணையில் இருந்து புல்லக் கவுண்டன்பட்டி நோக்கி சென்ற மினி பஸ்சின் பின்பக்க கண்ணாடியில் அடையாளம் தெரியாத நபர் கல்வீசி தாக்கினார். கண்ணாடி சேதம் அடைந்தது. ஏழாயிரம் பண்ணைபோலீசார் விசாரிக்கின்றனர்.
பைக் மோதி முதியவர் காயம்
சாத்துார் : தாயில்பட்டியை சேர்ந்தவர் அழகுமலை. 88. நேற்று இரவு 7:00 மணிக்கு ரோட்டின்ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத பைக் மோதி விட்டு சென்றது.தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

