ADDED : நவ 06, 2025 07:13 AM
கல்லுாரி மாணவி மாயம்
சாத்துார்: ஆலங்குளம் ஜக்கம்மாள்புரம் தங்கபாண்டி 48, இவர் மகள் விஜயசாதனா 19, பி.எஸ்.சி .இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நவ.3ல் கல்லுாரிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் மாயமானார் .ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பசுமாடு திருட்டு
சாத்துார்: வெங்கடாசலபுரத்தை சேர்ந்த அழகர்சாமி 52,ஆறு பசு மாடுகள் வைத்துள்ளார். அக்.31ல் வீட்டின் முன் மரத்தில் கட்டி இருந்த ஒரு பசு மாடு மாயமானது.சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
பு.த., தலைவர் கிருஷ்ணசாமி மீது வழக்கு
சாத்துார்: அப்பைய நாயக்கன் பட்டி எல்லைக்குட்பட்ட அ.புதுப்பட்டி காளப்பெருமாள்பட்டி பகுதிகளில் நிபந்தனைகளை மீறி நவ.3 அதிகாலை 1:30 மணி முதல் 2:20 மணி வரை புதிய தமிழகம் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் வி. ஜி. குணம், அக்கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக ஒலி மற்றும் ஒளி அமைத்து பரப்புரை செய்ததாக போலீஸ் எஸ்.எஸ்.ஐ., காசிராஜன்புகார் செய்துள்ளார். அப்பையநாயக்கன்பட்டி போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

