
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : வெம்பக்கோட்டை ஒன்றியம் எம்.துரைச்சாமிபுரம் ஊராட்சியில் குடிநீர் வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு பி.டி.ஓ., மகேஸ்வரி பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் பிரச்னை சரி செய்வதற்கான பணிகள் நாளை முதல் துவங்கும், ஒரு வாரத்திற்குள் அனை வருக்கும் சீராக குடிநீர் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

