நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தீ பிடித்து மூதாட்டி பலி
சிவகாசி: புதுக்கோட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் லட்சுமி 80. இவர் தனது வீட்டில் டீ போட்டு விட்டு பாத்திரத்தை இறக்கும்போது எதிர்பாராத விதமாக அவர் மீது தீப்பற்றியதில் காயமடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இறந்தார். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
விவசாயி பலி
சேத்துார்: சேத்தூர் அடுத்த தேவதானத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் 70, சைக்கிளில் நேற்று முன்தினம் மதியம் 2: 30க்கு நாகமலை ரோட்டில் வந்து கொண்டிருந்தார். பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் சம்பவ இடத்தில் உயிர் இழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

