நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் மார்க்சிஸ்ட்சார்பில் 18- வது வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
எம்.ஜி.ஆர் நகர் கிளை செயலாளர் காளிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு மகாலட்சுமி, நகர் குழு செயலாளர் சுப்பிரமணியன் நகர்குழு உறுப்பினர்கள் முருகானந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதில் 18 வது வார்டு ரயில்வே கேட் முதல் அழகாபுரி செல்லும் சாலை மோசமாக உள்ளதை ரயில்வே துறை அனுமதி பெற்று சாலை வசதி ஏற்படுத்துவது உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

