நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் வட்ட சட்டப் பணிகள் குழு ராஜாஜி இலவச மருத்துவ மையம் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மருத்துவ முகாம் நடந்தது.
ராஜபாளையம் சார்பு நீதிபதி சண்முகவேல் ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட உரிமை நீதிபதி ராமநாதன், குற்றவியல் நீதித்துறை நடுவர் ப்ரீத்தி பிரசன்னா முன்னிலை வகித்தனர்.
முகாமில் பொது மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இ.சி.ஜி., பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனை ,மருந்துகள் வழங்கப்பட்டன. 115 பயனாளிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செட்டியார்பட்டி ராஜாஜி இலவச மருத்துவ மைய செயலாளர் ராஜாராம் செய்திருந்தார்.

