கார் மோதி மில் தொழிலாளி பலி
ராஜபாளையம்: தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் மாரியம்மாள் 27, தனியார் மில் தொழிலாளி. ராஜபாளையத்தில் தனியார் மில்லில் பணிபுரிந்து கம்பெனி வேனில் வீடு திரும்பிய வழியில் டீக்கடையில் இறங்கி சென்றார். எதிரே வந்த கார் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கார் டிரைவர் சரவணனிடம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
வி வசாயி பலி
சாத்துார்: ஏழாயிரம் பண்ணை கரிசல்பட்டியை சேர்ந்தவர் ரகுநாதன் 55. விவசாயி. நீரழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். நவ. 25 காலை 10:00 மணிக்கு அவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை.
அவரது தோட்டத்திற்கு உறவினர்கள் சென்று பார்த்த போது அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது வழியில் பலியானார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.
வீட் டில் ந கை திருட்டு
சிவகாசி: ரிசர்வ் லைன் இந்திரா நகரை சேர்ந்தவர் அழகர் 50. ஆடு, கோழிகள் வளர்த்து கறிக்கடை தொழில் செய்து வருகிறார். இவரிடம் கோவில்பட்டி அன்னை தெரசா நகரை சேர்ந்த முத்துலட்சுமி 45, வேலை செய்து வந்தார்.இந்நிலையில் அழகர் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றபோது முத்துலட்சுமி வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 3 பவுன் தங்கச் செயின், நான்கரை பவுன் கம்மலை திருடினார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற் பனையில் ஈடுபட்ட
கல்லுாரி மாணவர்கள் கைது
சேத்துார்: சேத்துாரில் பள்ளி மாணவர் களுக்கு கஞ்சா விற்பதாக வந்த புகாரை அடுத்து போலீசார் ரோந்து செய்தனர். அதில் தளவாய்புரம் பகுதி தனியார் பள்ளி பின்புறம் சந்தேகப்படும் படி நின்றிருந்த நான்கு பேரிடம் சோதனை செய்ததில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரித்ததில் கல்லுாரி மாணவர்கள் தளவாய்புரம் மு.வினோத்குமார் 19, முகவூர் பி.வினோத்குமார், சதீஷ்குமார், முத்துச்சாமி புரத்தை சேர்ந்த இளைஞர் அன்பு ராஜ் 23, நான்கு பேர் என தெரிந்து கைது செய்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
விபத்தில் வாட்ச்மேன் பலி
சிவகாசி: மாரனேரி ஆசாரி தெருவை சேர்ந்தவர் கணேசன் 70. அப்பகுதியில் உள்ள பள்ளியில் வாட்ச்மேன் வேலை பார்த்து வந்த இவர் வீட்டிற்கு செல்வதற்காக ரோட்டில் நடந்து வரும் போது சன்னாசி பட்டியைச் சேர்ந்த பெருமாள் சாமி ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் கணேசன் இறந்தார். டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த சக்கரை தேவன் காயம் அடைந்தார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

