ADDED : செப் 20, 2026 03:31 PM
அ நிறம் | அளவு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா கூமாபட்டியில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலீஸ் அணிவகுப்பு நடந்தது.
சமீபகாலமாக கூமாபட்டி பகுதியில் பல்வேறு சமூக விரோத சம்பவங்கள், சாதி தகராறுகள், வெடிகுண்டு வீச்சு போன்ற செயல்கள், மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சம்பவங்களில் போலீசார் வழக்குகள் பதிவு செய்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சமூக விரோதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு நடந்தது.டி.எஸ்.பி.பாலச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் கூமாபட்டி, ராமசாமியாபுரம், கான்சாபுரம், நெடுங்குளம் பகுதிகளில் வலம் வந்தனர்.
