/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தண்டவாளத்தில் போலீசார் ரோந்து நாசவேலையை தடுக்க நடவடிக்கை
/
தண்டவாளத்தில் போலீசார் ரோந்து நாசவேலையை தடுக்க நடவடிக்கை
தண்டவாளத்தில் போலீசார் ரோந்து நாசவேலையை தடுக்க நடவடிக்கை
தண்டவாளத்தில் போலீசார் ரோந்து நாசவேலையை தடுக்க நடவடிக்கை
ADDED : அக் 26, 2024 07:01 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழகத்தில் கடையநல்லுார், மானாமதுரையில் ரயில்வே தண்டவாளத்தில் நாசவேலை சம்பவங்களை தொடர்ந்து இரவு நேரங்களில் தண்டவாளத்தில் நடந்து சென்று கண்காணிக்க ரயில்வே போலீசார் அறிவுறுத்தபட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ரயில்வே தண்டவாளத்தில் கிளிப்புகள் அகற்றப்பட்டிருந்தது. கடந்த மாதம் தென்காசி மாவட்டம் கடையநல்லுார் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்டிருந்தது. இவ்விரு சம்பவங்களிலும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சில நாட்களுக்கு முன் மத்திய பிரதேசத்தில் தண்டவாளத்தில் டெட்டனேட்டர்கள் கிடந்தன. உத்தரபிரதேசத்தில் காஸ் சிலிண்டர் இருந்தது. ரயில்வே போலீசார், மத்திய உளவுத்துறை, என்.ஐ.ஏ., அதிகாரிகளும் விசாரிக்கின்றனர்.
தமிழகத்தில் ரயில்வே ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட தண்டவாளத்தில் இரவில் போலீசார் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே போலீசார் சில நாட்களாக இப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.