/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயின் பறித்த ராணுவ வீரருக்கு போலீஸ் 'காப்பு'
/
செயின் பறித்த ராணுவ வீரருக்கு போலீஸ் 'காப்பு'
ADDED : ஏப் 20, 2025 11:52 PM
ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரில், மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த ராணுவ வீரரை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த சுந்தரமூர்த்தி மனைவி காமாட்சி, 61. இவர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, தெருவில் நடந்து சென்றார்.
அவருக்கு பின்னால் நடந்து வந்த ஒருவர், 2.5 சவரன் தங்க செயினை பறித்து, தப்பி ஓடினார். அப்பகுதி மக்கள் அவரை விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர், மம்சாபுரம் துப்புரவு பணியாளர் காலனி யைச் சேர்ந்த குழந்தைவேல், 30, என்பதும், டில்லியில் ராணுவத்தில் பணியாற்றி வருவதும், விடுமுறைக்கு ஊருக்கு வந்து நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது.
ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் அவரை கைது செய்தனர்.

