/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குட்கா விற்றால் கடும் நடவடிக்கை ஸ்ரீவி., போலீஸ் எச்சரிக்கை
/
குட்கா விற்றால் கடும் நடவடிக்கை ஸ்ரீவி., போலீஸ் எச்சரிக்கை
குட்கா விற்றால் கடும் நடவடிக்கை ஸ்ரீவி., போலீஸ் எச்சரிக்கை
குட்கா விற்றால் கடும் நடவடிக்கை ஸ்ரீவி., போலீஸ் எச்சரிக்கை
ADDED : ஜன 14, 2024 11:46 PM
ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துாரில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையை முழு அளவில் தடுக்க தெருக்கள், பஜார் வீதி கடைகளில் குட்கா விற்போரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பது, கடைக்கு சீல் வைப்பு போன்ற நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக அதிகளவில் குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுவது, வாகன சோதனை மூலம் பிடிபட்டு வருகிறது. இதனால் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் நத்தம்பட்டி, வத்திராயிருப்பு, கூமாபட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கிராமப்புறங்கள், தோப்புகளில் குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து வருகின்றனர்.
போலீசார் இல்லாத நேரங்களில் அங்கிருந்து நகர் பகுதிக்கு கொண்டு வந்து விற்பனையில் ஈடுபடுகின்றனர். இதனால் நகரில் தெருக்கடைகள், பஜார் வீதி கடைகளில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பெட்டிக்கடைகளை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அவ்வாறு குட்கா புகையிலை பொருட்கள் விற்று பிடிபடுபவர்கள் இதுவரை ஸ்டேஷன் பெயிலில் விடப்பட்டு வந்தனர்.
தற்போது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். மேலும் உணவு பாதுகாப்புத் துறை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தகவல் தெரிவித்து கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளையும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். எனவே கடைகளில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.