/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட போலீஸ்காரர்: இருவரும் சஸ்பெண்ட்
/
பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட போலீஸ்காரர்: இருவரும் சஸ்பெண்ட்
பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட போலீஸ்காரர்: இருவரும் சஸ்பெண்ட்
பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட போலீஸ்காரர்: இருவரும் சஸ்பெண்ட்
ADDED : நவ 26, 2025 01:04 AM
விருதுநகர்: விருதுநகரில் பேச மறுத்த பெண் போலீசிடம் இரவு பணியின் போது நவ.23ல் முதல்நிலை போலீஸ் கார்த்திகேயன் தகராறில் ஈடுபட்டார். இருவரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., கண்ணன் உத்தரவிட்டார்.
விருதுநகர் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை போலீசாக பணிபுரிபவர் கார்த்திகேயன். இவருக்கும் ஊரக போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் முதல்நிலை பெண் போலீஸ் ஒருவருக்கும் பழக்கம் இருந்தது. இது குறித்து கார்த்திகேயன் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரகப்போலீசில் புகார் அளித்தார்.
அவரிடம் பேசுவதை பெண் போலீஸ் தவிர்த்தார். நவ.23ல் இரவு 9:00 மணிக்கு விருதுநகர் நான்கு வழிச்சாலையில் உள்ள சத்திரரெட்டியபட்டி செக் போஸ்ட்டில் பணியில் இருந்த பெண் போலீசிடம் கார்த்திகேயன் தகராறில் ஈடுபட்டார். ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட கார்த்திகேயன், பெண் போலீஸ் ஆகியோரை எஸ்.பி., கண்ணன் சஸ்பெண்ட் செய்தார்.