/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்
/
மாவட்டத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 15, 2024 11:04 PM
விருதுநகர் : விருதுநகர் மேற்கு போலீஸ் ஸ்டேஷன், காவலர் குடியிருப்பில் பொங்கல் கொண்டாட்டம் நடந்தது.இதில் இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், ராஜசுலோசனா, சித்ரகலா, அங்கு குடியிருக்கும் போலீசார், அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர். இசை நாற்காலி, உறியடி, லக்கி கார்னர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வண்ண கோலமிட்டு ஸ்டேஷன் முன் பொங்கலிட்டனர்.
* விருதுநகர் ஒய்ஸ்மென்ஸ் விழியிழந்தோர் மறுவாழ்வு மையத்தில் பிரெய்லி பொங்கல் விழா நடந்தது. ஏ.என்.டி., அறக்கட்டளை தலைவர் ஜெயராஜசேகர், செயலாளர் பாண்டிசெல்வி உட்பட பலர் பங்கேற்றனர். இரவு உணவு வழங்கப்பட்டது.
* இன்னாசியார் சர்ச், பாண்டியன் நகர் சவேரியார் சர்ச, நிறைவாழ்வு நகர் செபமாலை அன்னை சர்ச், ஆர்.ஆர்., நகர் புனி வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் பொங்கல் விழா நன்றி திருப்பலி, பாதிரியார்கள் அருள்ராயன், இமானுவேல் சதீஷ், லாரன்ஸ்,அந்தோணி சாமி, பீட்டர் ராய், அருள்தாஸ் வழங்கினர். தொடர்ந்து சர்ச் முன் பொங்கலிட்டு கொண்டாடினர். விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
* ஸ்ரீவில்லிபுத்தூர் வள்ளுவர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் பள்ளித் தாளாளர் சிவகுமாரன் தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் சந்தானம் முன்னிலை வகித்தார். முதல்வர் டேவிட் மனோகரன், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
* மாரியம்மன் கோவில் செக்கடி தெருவில் இளைஞர்கள் மன்றத்தின் சார்பில் பொங்கல் கொண்டாட்டம் நடந்தது. பின்னர் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
* மாரியம்மன் கோவில் தெரு, மேற்கு பகுதியிலும், நகரின் பல்வேறு தெருக்களிலும் இளைஞர்கள் மன்றங்களின் சார்பில் பொங்கல் கொண்டாட்டம் நடந்தது. பாரம்பரிய தமிழ் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
* அருப்புக்கோட்டை அருகே சூலக்கரை போலீஸ் ஸ்டேஷனில் தை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவசக்தி தலைமை வகித்தார். எஸ்ஐ., கார்த்திகா முன்னிலை வகித்தார். ஸ்டேஷன் முன்பு பெண் போலீசார் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பூஜைகள் செய்த பின் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. போலீசார்கள் தங்கள் குடும்பத்துடன் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
* திருச்சுழி போலீஸ் ஸ்டேஷன், மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ரமாராணி, எஸ்.ஐ., வீரணன் தலைமை வகித்தனர். வண்ண வண்ண கலர் உடைகளுடன் போலீசார் உற்சாகமாக பொங்கலை கொண்டாடினர். பொங்கல் வைத்து பூஜைகள் முடிந்து அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.