/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா
/
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா
ADDED : ஜன 13, 2025 06:20 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை அறிவியல் கல்லுாரி, ரமணாஸ் பி.எட்., கல்லுாரிகளில் பொங்கல் விழா நடந்தது. மாணவிகள் கும்மி அடித்து, குலவையிட்டனர். ரங்கோலி போட்டி, ஒயிலாட்டம் நடந்தது.
மதுரையில் உள்ள மது இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த டாக்டர்கள் பரத், லக்க்ஷயா கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லுாரி சேர்மன் ராமச்சந்திரன், கலை கல்லுாரி செயலர் இளங்கோவன், பி.எட்., கல்லுாரி செயலாளர் சங்கரநாராயணன், நிர்வாக குழு உறுப்பினர் சுப்பிரமணியம் கலந்து கொண்டனர்.
* அருப்புக்கோட்டை ரத்தினம் நர்சிங் கல்லுாரியில் நடந்த பொங்கல் விழாவில் கோலாட்டம், உறியடித்தல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளில் மாணவிகள் பங்கேற்றனர். விழாவில் துணைத் தலைவர் டாக்டர் சிந்துரேகா, முதல்வர் தாமரைச்செல்வி பங்கேற்றனர்.
* சிவகாசி காக்கிவாடன்பட்டி ஆர்.பொன்னுச்சாமி நாயுடு கல்வியியல் கல்லுாரி, கே.ஆர்.பி., கலை, அறிவியல் கல்லுாரி சார்பில் நடந்த பொங்கல் விழாவில் கல்லுாரி தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். கல்வியல் கல்லுாரி முதல்வர் கண்ணன், கலை கல்லுாரி முதல்வர் ராம்ஜெயந்தி முன்னிலை வகித்தனர். அனைவரும் பொங்கலிட்டு இயற்கையை வணங்கினர். வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
* சிவகாசி ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் துணை முதல்வர் ஞான புஷ்பம் துவக்கி வைத்தார். தலைமை முதல்வர் பாலசுந்தரம், தாளாளர் ஜெயக்குமார், முதல்வர் அம்பிகா தேவி பேசினர். மாணவர்களுக்கு வாழ்த்து மடல் தயாரித்தல், பானை அலங்கரித்தல், ரங்கோலி கோலம், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
* சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். பல்வேறு துறை மாணவர்களுக்கிடையே விவாத அரங்கு, வில்லுப்பாட்டு, மெஹந்தி, நெருப்பில்லா சமையல், நாடகம், பாரம்பரிய பொங்கல் வைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.