/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா
/
மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா
ADDED : ஜன 14, 2024 04:54 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட பள்ளி கல்லுாரிகள், அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
* விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் விழா கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் குடும்பத்துடன் பங்கேற்று மாட்டு வண்டியை ஓட்டி அனைவரின் கவனத்தையும்ஈர்த்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் பல துறைகளை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் தங்களுடைய துறைகளின் சார்பில் கலந்து கொண்டு மற்ற துறையினருடன் போட்டியிட்டனர்.
ஆண்களுக்கான வட்டக்கல் துாக்குதல் போட்டியில் பல துறை அலுவலர்களும் பங்கேற்றனர். மேலும் பரதநாட்டியம், சிலம்பம், வாள்வீச்சு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது. போட்டியில் வென்றவர்களுக்கு கலெக்டர் ஜெயசீலன் பரிசுகளை வழங்கினார்.
* விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில்நுட்பக்கல்லுாரியில் கல்லுாரி தலைவர் பெரியசாமி, செயலாளர் தர்மராஜன், துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், துணைச் செயலாளர் முருகன், பொருளாளர் ஸ்ரீ முருகன், கல்லுாரி முதல்வர் செந்தில் உள்பட பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் கரகம், சிலம்பம் உள்ள கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
* விருதுநகர் எஸ்.எப்.எஸ்.,பள்ளியில் முதல்வர் பாதிரியார் ஆரோக்கியம், பாண்டியன் நகர் புனித சவேரியார் சர்ச் பாதிரியார், பள்ளி தாளாளர் லாரன்ஸ் தலைமை வகித்தனர். பொருளாளர் இமானுவேல் சதீஷ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து பொங்கல் வைத்தனர். 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது. டில்லியில் நடந்த சர்வதேச யோகப்போட்டியில் வெள்ளிபதக்கம் வென்ற 5 ம் வகுப்பு மாணவி வர்ஷினுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
* சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியின் நடந்த விழாவில் கல்லுாரி தலைவர் திலகவதி, செயலர் அருணா முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தனர். கல்லுாரி மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்றார். கரகாட்டம், சிலம்பம், உறியடித்தல், கும்மியடித்தல், நாட்டுப்புறப் பாடல்கள், கிராமத்து பெண்களின் அணிவகுப்பு நடந்தது. கல்லுாரி மாணவர் தலைவர் சபானா நன்றி கூறினார்.
* சிவகாசி காக்கி வாடன் பட்டி பொன்னுச்சாமி நாயுடு கல்வியியல் கல்லுாரி, கே.ஆர்.பி., கலை அறிவியல் கல்லுாரியில் கல்லூரி தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார் .முதல்வர்கள் கண்ணன், ராம் ஜெயந்தி முன்னிலை வகித்தனர். மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகள் நடந்தது.
* சிவகாசி ஹயக்ரிவால் சர்வதேச பள்ளியில் தலைவர் வெங்கடேஷ் பிரசாத் துவக்கி வைத்தார் .தலைமை முதல்வர் பாலசுந்தரம், தலைவர் ஜெயக்குமார் முதல்வர் அம்பிகா தேவி பேசினர். மாணவர்களின் வாழ்த்து மடல் தயாரித்தல், பானை அலங்கரித்தல், ரங்கோலி கோலம் போடுதல், பாரம்பரிய விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி துணை முதல்வர்கள் ஞான புஷ்பம், சுதா, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
* சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சங்கீதா தலைமை வகித்தார். துணை மேயர் விக்னேஷ் பிரியா, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். விஸ்வநாதன் ஆர்.டி.ஓ., மாநகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
* சிவகாசி அரசன் மாடல் பள்ளியில் பள்ளி முதன்மை முதல்வர் சாரா ஜேக்கப், முதல்வர் சிவசங்கரி தலைமை வகித்தனர். மாணவர்கள் பொங்கல் வைத்து கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
* சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி, பி.எஸ்.ஆர்.ஆர்., பொறியியல் கல்லுாரி, பி.எஸ்.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி, கல்வியியல் கல்லுாரி பாலிடெக்னிக் கல்லுாரிகளில் பொங்கல் விழா நடந்தது. கல்வி குழுமங்கள் இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி தலைமை வகித்தனர். கல்லுாரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் அலுவலக உதவியாளர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து புது பானையில் பொங்கலிட்டனர். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி பரிசு வழங்கினர்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லி சுந்தரேஸ்வரி கல்வியில் கல்லூரியில் தைப்பொங்கல் திருவிழா நடந்தது. கல்லூரி செயலர் திலீபன் ராஜா தலைமை வகித்தார். முதல்வர் மல்லப்பராஜா முன்னிலை வகித்தார். பேராசிரியர் மோகன்ராஜ் வரவேற்றார். நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் விழாவை துவக்கி வைத்து பேசினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடந்தது.பேராசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.
* மொட்டமலை பாலகிருஷ்ணா கலை ,அறிவியல் கல்லூரியில் சேர்மன் மாடசாமி தலைமை வகித்தார். முதல்வர் அருண் முன்னிலை வகித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் , விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பேராசிரியர்கள், மாணவர்கள், கல்லூரி அலுவலர்கள் பங்கேற்றனர்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் தெலுங்கு சூளை விநாயகர் வித்யாலயா பள்ளியில் தாளாளர் இன்பராஜ் தலைமை வகித்தார். செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜலட்சுமி வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
* அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் ரமணாஸ் கல்வியியல் கல்லூரிகளில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. கல்லூரி சேர்மன் ராமச்சந்திரன், கலை கல்லூரி செயலர் இளங்கோவன், பி.எட்., கல்லூரி செயலர் சங்கர நாராயணன், நிர்வாகிகள் சுப்பிரமணியம், விக்னேஷ் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாரியம்மாள், கவிதா, முத்துமணி, சோனியா, அருண், மனோஜ் செய்தனர். முதல்வர் தில்லை நடராஜன், துணை முதல்வர் பெளர்ணா மாணவிகளை பாராட்டி பேசினர். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

