/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் பொங்கல் விழா கோலாகலம்
/
மாவட்டத்தில் பொங்கல் விழா கோலாகலம்
ADDED : ஜன 14, 2025 10:45 PM
விருதுநகர்; மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்களில் விமர்சையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். இளவட்டக்கல் துாக்குதல், உறியடித்தல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடந்தன. அரசு அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
* விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கரகம், சிலம்பம், கயிறு இழுத்தல், இளவட்டக்கல் துாக்குதல், கோலப்போட்டி, உறியடித்தல், கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லுாரி செயலாளர் தர்மராஜன், துணை தலைவர் பாலகிருஷ்ணன், முதல்வர் செந்தில் பங்கேற்றனர்.
* விருதுநகர் எம்.எஸ்.பி., நாடார் கல்வியியல் கல்லுாரியில் செயலாளர் மகேஷ் பாபு, தலைவர் சம்பத்குமார், உபதலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, பொருளாளர் குமரன், கல்லுாரி முதல்வர் சுரேஷ்குமார், செந்திக்குமார நாடார் கல்லுாரி முதல்வர் சாரதி உள்பட பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
* விருதுநகர் நோபிள் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் பொங்கல் விழாவில் குழும தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம் தலைமை வகித்தார்.
செயலாளர் வெர்ஜின் இனிகோ முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் பொங்கல் வைத்தனர். முதல்வர் உமாமகேஸ்வரி, நிர்வாக அதிகாரி விக்னேஸ்வரன் பேசினர். பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடந்தன.
* மத்திய அரசின் புள்ளியியல் நிறுவனமான தேசிய புள்ளியியல் அலுவலகத்தில் அதன் உதவி இயக்குனர் ரெத்தினம் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதில் அனைத்து அலுவலர்கள், குடும்பத்தினர் கலந்து கொண்டனர். விழாவை யொட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ராஜபாளையம்: ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் மலைவாழ் மக்கள் குடும்பத்தினருடன் மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா தலைமையில் பொங்கல் விழா கொண்டாடி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
*ராஜபாளையம் ஏ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லுாரியில் மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கலிட்டனர். கல்லுாரி நிர்வாகி ரமணி, சுஜிதா, தலைவர் கீதா முதல்வர் ஜமுனா கலந்து கொண்டனர்.
*ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி பொங்கல் நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் பிரகாஷ், முதல்வர் ராமகிருஷ்ணன், சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராமராஜ் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
* சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனி குரு பெண்கள் கலை அறிவியல் கல்லுாரி பொங்கல் தின விழாவில் குழும தலைவர் ஆறுமுகம், தாளாளர் பழனி குரு துவக்கி வைத்தனர். முதல்வர் நாகலட்சுமி, பேராசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.
*வைமா வித்யாலயா பள்ளியில் பொங்கல் நிகழ்ச்சிக்கு நிறுவனர் வைமா திருப்பதி செல்வன் தலைமை வகித்தார்.
மேனேஜிங் டிரஸ்டி அருணா விளக்கேற்றி தொடங்கினார். பொங்கல் வைத்து பாரம்பரிய உடைகளில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் விளையாட்டுகள் நடந்தன.
சாத்துார்: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் பொங்கல் விழாவில் ரங்கோலி, ஒயிலாட்டம், களியாட்டம், உறியடித்தல் தனிநபர், குழு நடனம் பாட்டு போட்டி, கயிறு இழுத்தல், இசை நாற்காலி, கரும்பு உடைத்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
மாணவர்களுடன் பேராசிரியர்கள் இணைந்து பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடினர். முதல்வர் காளிதாசன் முருகவேல் தலைமை வகித்தார்.