/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மழையால் களையிழந்த காணும் பொங்கல்
/
மழையால் களையிழந்த காணும் பொங்கல்
ADDED : ஜன 16, 2025 04:43 AM
சாத்துார்: சாத்துார் பகுதியில் விட்டு விட்டு பெய்து வரும் சாரல் மழையால் காணும் பொங்கல் களை இழந்தது. இதனால் மக்கள் விரக்தியடைந்தனர்.
சாத்துாரில் தைப்பொங்கலுக்கு மறுநாள் காணும் பொங்கல் நடைபெறுவது வழக்கம். காணும் பொங்கல் அன்று நகராட்சி பகுதி மற்றும் ஊராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளில் சமைத்துக் கொண்டு வந்த உணவை வைப்பாற்றில் ஒன்றாக கூடி உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து உணவு உண்டு பல்வேறு விளையாட்டுகள் விளையாடி மகிழ்வது வழக்கம்.
தற்போது வைப்பாற்றில் மழை தண்ணீர் தேங்கி நிற்பதாலும் மேலும் சீமை கருவேல முள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதாலும் வைப்பாற்றில் மணல் மேட்டுத் திருவிழா இந்த ஆண்டு நடைபெறாது என நகராட்சி நிர்வாகம் அறிவித்தது.
இதற்கு மாற்றாக நகரில்உள்ள பூங்காக்களில் மக்கள் கூடி காணும் பொங்கலை நடத்தும் வகையில் வண்ண விளக்குகளால் பூங்காக்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.ஆனால் நேற்று முன்தினம் முதல் சாத்துார் மற்றும் சுற்றுப்பகுதியில் மழை மேகம் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் விட்டு விட்டு சாரல் மழைபெய்து வந்தது.
இதனால் பூங்காக்களில் வண்ண விளக்குகள்அலங்கரிக்கப்பட்டு இருந்த போதும் மிகக் குறைந்த அளவிலான மக்களே வந்திருந்தனர் நேற்று மதியம் முதல் மாலை வரை தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்ததால் வீட்டை விட்டு பலர் வெளியில் வரவில்லை இதனால் சாத்துார் நகர் பகுதி முற்றிலும் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.
தொடர் சாரல் மழையால் காணும் பொங்கல் களை இழந்து போனது.