/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பூக்குழி திருவிழா நாளை கொடியேற்றம்
/
பூக்குழி திருவிழா நாளை கொடியேற்றம்
ADDED : மார் 17, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா நாளை (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மார்ச் 29ல் பூக்குழி, மார்ச் 30ல் தேரோட்டமும் நடக்கிறது.
இதனை முன்னிட்டு நாளை (மார்ச் 18) காலை 7:35 மணிக்கு மேல் 8 :45 மணிக்குள் கொடியேற்றும் வைபவம் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து தினமும் காலை 10:00 மணிக்கு அம்மன் மண்டகப்படி எழுந்தருளும், இரவு 10:00 மணிக்கு வீதி உலாவும் நடக்கிறது. முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா மார்ச் 29 மதியம் 12:35 மணிக்கு மேல் துவங்குகிறது. மார்ச் 30 காலை 11:00 மணிக்குமேல் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.