/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணுால் மாற்றும் நிகழ்வு
/
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணுால் மாற்றும் நிகழ்வு
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணுால் மாற்றும் நிகழ்வு
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணுால் மாற்றும் நிகழ்வு
ADDED : ஆக 09, 2025 11:34 PM

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பல்வேறு கோயில்கள் சமூக சாவடிகள், பொது இடங்களில் பூணுால் மாற்றும் நிகழ்வு நடந்தது.
இந்த நாளில் பூணுால் அணியும் பிராமணர், விஸ்வகர்மா, செட்டியார் சமூகத்தினர் பழைய பூணுாலை மாற்றிக் கொள்வது முக்கிய சம்பிரதாயமாக உள்ளது. குறிப்பாக பிராமணர்கள் வேதங்களை கற்பித்தலை துவங்கும் நாளாகவும் ஆன்மீக புதுப்பித்தலுக்கான நாளாகவும் கருதி தொடங்குகின்றனர்.
இதனை ஒட்டி ராஜபாளையத்தில் கோதண்டராம சுவாமி கோயிலில் நேற்று காலை முதல் சிறப்பு பூஜை நடந்தது. கோயில் வளாகத்தில் ஹோமம் வளர்க்கப்பட்டு, காண்டரிஷி தர்ப்பணம், சந்தியா வந்தனம் உள்ளிட்ட நிகழ்வுகள், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
சுற்றுப்பகுதிகளை சேர்ந்த சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று புதிய பூணுால் அணிந்தனர். இதேபோல் என். ஆர்.கே மண்டபம், சம்பந்தபுரம் அக்ரஹாரம், சொக்கர் கோயில் விஸ்வகர்மா சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடந்தது.
* அருப்புக்கோட்டை தாதன்குளம் விநாயகர் கோயிலில் பிராமண சமாஜத்தின் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் தலைவர் மணியன் தலைமை வகித்தார். ஏராளமானோர் பங்கேற்று புதிய பூணுாலை மாற்றிக்கொண்டனர்.
* நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் அவதார ஸ்தலத்தில் கோயிலில் பணியாற்றும் பட்டர்கள், ஸ்தானிகர்கள் உட்பட பலர் பழைய பூணூலை கழற்றி புதிய பூணூலை அணிந்தனர்.