/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு கழிவுகளை எரிப்பதற்கு தனியாக குழி அமைக்க வாய்ப்பு
/
பட்டாசு கழிவுகளை எரிப்பதற்கு தனியாக குழி அமைக்க வாய்ப்பு
பட்டாசு கழிவுகளை எரிப்பதற்கு தனியாக குழி அமைக்க வாய்ப்பு
பட்டாசு கழிவுகளை எரிப்பதற்கு தனியாக குழி அமைக்க வாய்ப்பு
ADDED : மார் 15, 2024 06:29 AM
மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர், சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1070 பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. எந்த உரிமம் பெற்றிருந்தாலும் பட்டாசு ஆலை அமைக்கும்போது அதன் வளாகத்திலேயே பட்டாசு கழிவுகளை எரிப்பதற்கு தனியாக குழி அமைக்க வேண்டும்.
இதனைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்திருக்க வேண்டும். இதில்தான் பட்டாசு கழிவுகளை கொட்டி பாதுகாப்பாக எரிக்க வேண்டும். பாதுகாப்பு குழி குறித்து ஆய்வு செய்து உறுதிப்படுத்த பின்னரே ஆலைகளுக்கு உரிமம் வழங்கப்படும்.
இந்நிலையில் பெரும்பான்மையான பட்டாசு ஆலைகளில் அதன் கழிவுகளை ஆலை வளாகத்தில் உள்ள குழியில் பாதுகாப்பாக தீயிட்டு எரிக்காமல், வெளியிலும், பொது இடங்களிலும் ரோட்டிலும் கொட்டி விடுகின்றனர். இதனால் அவ்வப்போது எதிர்பாராமல் வெடி விபத்து ஏற்படுகின்றது. இரு வாரத்திற்கு முன்பு செங்கமலபட்டியில் விளையாட்டு மைதானம் அருகே பட்டாசு கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது. இதன் அருகே அமர்ந்திருந்த மூன்று வாலிபர்கள் எதிர்பாராமல் தீ வைத்த போது கழிவுகளில் தீ பட்டு வெடி விபத்து ஏற்பட்டு காயம் அடைந்தனர்.
இதே போல் சமீபத்தில் வச்சகாரப்பட்டியில் சிறுநீர் கழிப்பதற்காக ஒதுங்கிய நபர் இதே பட்டாசு கழிவு வெடித்து காயம் அடைந்தார். கடந்த காலங்களிலும் இதுபோன்று பட்டாசு கழிவுகளால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக இதில் தீயிட்டு பலமுறை காயம் அடைந்துள்ளனர். பட்டாசு ஆலையின் வளாகத்திற்குள் பாதுகாப்பாக தீயிட்டு எரிக்க வேண்டும் என விதிமுறை இருந்தும் இந்த விதி மீறப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது.
தற்போது அதிக ஆட்கள் வைத்து மரத்தடியில் பட்டாசு தயாரிப்பது உள்ளிட்ட விதி மீறல்களை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோல் பட்டாசு கழிவுகள் பாதுகாப்பாக எரிப்பது குறித்தும் கண்காணிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

