ADDED : மே 11, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; விருதுநகர் தலைமை தபால் நிலையத்தில் பாரதிய அஞ்சல் ஊழியர் சங்க மாநாடு நடந்தது. எழுத்தர் சங்க மாநிலச் செயலாளர் மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். போஸ்ட்மேன் சங்க மாநில பொது செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
பாரதிய மஸ்துார் சங்க மாநில பொதுச் செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் பேசினர். ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டும் பணி வழங்க வேண்டும், 8வது ஊதியக் குழுவை உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
போஸ்ட்மேன் சங்க செயலாளர் மகாலட்சுமி, எழுத்தர் சங்க செயலாளர் முருகன் ஆகியோர் மாநாட்டை ஒருங்கிணைத்தனர்.