/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வந்தே பாரத் ரயிலில் 'பவர் கட்' மூச்சு திணறலால் கடும் அவதி
/
வந்தே பாரத் ரயிலில் 'பவர் கட்' மூச்சு திணறலால் கடும் அவதி
வந்தே பாரத் ரயிலில் 'பவர் கட்' மூச்சு திணறலால் கடும் அவதி
வந்தே பாரத் ரயிலில் 'பவர் கட்' மூச்சு திணறலால் கடும் அவதி
ADDED : மே 05, 2025 03:48 AM
விருதுநகர்: பெங்களூரு கன்டோன்மென்ட் --- மதுரை வந்தே பாரத் ரயிலில், மின்சாரம் தடைபட்டதால் நடுவழியில் நின்றது. இதனால், கதவுகளை திறக்க முடியாமல் பயணியர் அவதிக்குள்ளாகினர்.
மதுரை - பெங்களூரு கன்ட்டோன்மென்ட் - மதுரை இடையே திருச்சி வழியாக, தினமும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
நேற்று மதியம் 1:30 மணிக்கு, பெங்களூரு கன்டோன்மென்ட்டில் இருந்து புறப்பட்ட ரயில், இரவு 7:10 மணிக்கு திருச்சியை நெருங்கிய போது, மின்சாரம் தடைபட்டு நடுவழியில் நின்றது.
இதனால் கதவுகளை திறக்க முடியாமல், இருளுக்குள் சிக்கி, பயணியர் அவதிக்குள்ளாகினர். சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ரயில்வே ஊழியர்கள் திருச்சி ஸ்டேஷனில் இருந்து சென்று, பெட்டிகளின் கதவுகளை திறந்தனர்.
இதனால், ஒன்றரை மணி நேரம் நடுவழியில் நின்ற ரயில் பின், சரிசெய்யப்பட்டு, இரவு 8:50 மணிக்கு திருச்சி வந்தது.
நேற்று முன்தினம் எழும்பூர் - நாகர்கோவில் - எழும்பூர் வந்தே பாரத் ரயில், தொழில்நுட்பக் கோளாறால் 3:00 மணி நேரம் தாமதமாக பயணித்தது குறிப்பிடத்தக்கது.

