ADDED : செப் 29, 2024 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்துார்: ராஜபாளையம் அருகே சேத்துாரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையின் கீழ் மிக சன்ன ரக நெல் சாகுபடி திட்டத்தில் விவசாயிகளுக்கு நேரடி கள பயிற்சி நடந்தது.
பண்ணை பள்ளி விவசாயிகளுக்கு நடந்த பயிற்சியில் உழவு முதல் அறுவடை வரை பயிரின் சுற்று சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்கள் வயல் பிரச்னைகளை தாங்களே தீர்த்துக் கொள்ளும் படி விளக்கம் அளிக்கப்பட்டது.
மண் பரிசோதனை , கள கண்காணிப்பு நெற்பயிரில் வரிசை நடவு முறை, பூச்சி தாக்குதல் கண்டறிவது உயிர் உரங்கள் நுண்ணூட்ட உரங்கள் உபயோகப்படுத்தும் முறை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. பூச்சிகள் துறை பேராசிரியர் விஜயராகவன், வட்டார வேளாண் உதவி இயக்குனர் திருமலைசாமி களப்பயிற்சி அளித்தனர்.