ADDED : செப் 11, 2026 12:19 AM

அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள் பக்தர்கள் சபா சார்பில் மழை வேண்டி பிரார்த்தனை ஊர்வலம் நேற்று மாலை 6:30 மணிக்கு நடந்தது.
தமிழகத்தில் மழை பெய்து ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் நிரம்பி பசுமை சூழல் ஏற்பட வேண்டி, நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆண்டாள், கிருஷ்ணர் வேடம் அணிந்து, ஆழி மழைக் கண்ணா பாசுரம் பாடி, ஆண்டாள் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மாட வீதிகள் சுற்றி ஊர்வலமாக வந்தனர்.
