ADDED : அக் 11, 2024 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் நாடார் பழனிச்சாமி வடக்கு வீதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் மனைவி பொன் லட்சுமி 22. இருவருக்கும் திருமணம் ஆகி ஆறு மாதங்களான நிலையில் பொன் லட்சுமி நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இவர் வீட்டில் குளித்த போது திடீரென வலிப்பு ஏற்பட்டு அருகில் இருந்த தண்ணீர் பேரலில் விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.