/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடி நாலுாரில் சேறும் சகதியுமான பாதையால் கர்ப்பிணிகள் சிரமம்
/
நரிக்குடி நாலுாரில் சேறும் சகதியுமான பாதையால் கர்ப்பிணிகள் சிரமம்
நரிக்குடி நாலுாரில் சேறும் சகதியுமான பாதையால் கர்ப்பிணிகள் சிரமம்
நரிக்குடி நாலுாரில் சேறும் சகதியுமான பாதையால் கர்ப்பிணிகள் சிரமம்
ADDED : ஜன 11, 2024 05:14 AM

நரிக்குடி : அரசு பள்ளி, துணை சுகாதார நிலையத்திற்கு செல்லும் பாதையில் மழைக்கு சேறும், சகதியுமாக இருப்பதால் மாணவர்கள், கர்ப்பிணிகள் நடந்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
நரிக்குடி நாலூர் கிராமத்தில் துணை சுகாதார நிலையமும், அரசு உயர்நிலை பள்ளியும் அருகருகே உள்ளது. மெயின் ரோட்டிலிருந்து இங்கு செல்ல மண் பாதை, 300 அடி தூரம் உள்ளது. குண்டும் குழியுமாக இருப்பதால் நடந்து செல்பவர்கள் இடறி விழ நேரிடுகிறது. கர்ப்பிணிகள் நடந்து செல்ல முடியவில்லை. வாகனங்களில் செல்லும்போது குலுங்கி குலுங்கி செல்ல வேண்டி இருக்கிறது.
மழை நேரங்களில் சேறும் சகதியுமாக உள்ளது. பள்ளி மாணவர்கள் நடந்து செல்லும் போது சீருடையில் சகதி பட்டு அசுத்தமாவதால், பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கர்ப்பிணி பெண்கள் டூவீலர்களில் அமர்ந்து செல்லும்போது நிலை தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. பாதையை ஓட்டி புதர் மண்டி கிடப்பதால் விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. மாணவர்கள், கர்ப்பிணிகளின் நலனை கருத்தில் கொண்டு தார் சாலை அமைக்க வேண்டும்.