/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தண்ணீர் பாய்ச்சுவதில் முன்விரோதம்: கத்தியால் குத்தி ஒருவர் கொலை
/
தண்ணீர் பாய்ச்சுவதில் முன்விரோதம்: கத்தியால் குத்தி ஒருவர் கொலை
தண்ணீர் பாய்ச்சுவதில் முன்விரோதம்: கத்தியால் குத்தி ஒருவர் கொலை
தண்ணீர் பாய்ச்சுவதில் முன்விரோதம்: கத்தியால் குத்தி ஒருவர் கொலை
ADDED : நவ 04, 2025 02:08 AM
காரியாபட்டி:  வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக முன் விரோதம் காரணமாக செந்தாமரை கண்ணனை 34,  கருணாகரன் 21, கத்தியால் குத்தி கொலை செய்தார்.
காரியாபட்டி உவர்குளத்தை சேர்ந்த செந்தாமரைக் கண்ணன், விவசாயம் செய்து வந்தார்.  அதே ஊரைச் சேர்ந்த கருணாகரன் 21. இவர்களது வயல்கள் ஒரே இடத்தில் உள்ளன. தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்தது. அவ்வப்போது பிரச்னை ஏற்படும்.  ஊர் பெரியவர்கள் சமரசம் செய்து வைப்பது வழக்கம்.
நேற்று இரவு 9.30 மணிக்கு அங்குள்ள கண்மாய் பகுதியில் இருவரும் மது அருந்தினர்.  அப்போது மது போதையில்  தகராறு ஏற்பட்டது.  கருணாகரன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தாமரை கண்ணனை வயிற்றில் குத்தி கொலை செய்து, தப்பி ஓடினார். கத்திக்குத்துடன் வீட்டுக்கு செல்ல முயன்ற செந்தாமரை கண்ணன் மயங்கி விழுந்து இறந்தார்.  நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.