/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் அரசு மருத்துவமனையில்தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அத்துமீறல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தேவை
/
விருதுநகர் அரசு மருத்துவமனையில்தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அத்துமீறல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தேவை
விருதுநகர் அரசு மருத்துவமனையில்தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அத்துமீறல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தேவை
விருதுநகர் அரசு மருத்துவமனையில்தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அத்துமீறல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தேவை
ADDED : ஜன 09, 2024 12:46 AM
விருதுநகர், : விருதுநகர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவின் உள்ளே வந்து தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் விசிட்டிங் கார்டுகளை பட்டுவாடா செய்கின்றனர். இதை தட்டிகேட்கும் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருகின்றனர். விபத்து, பாம்பு கடி, தற்கொலை முயற்சி உள்ளிட்டவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இவர்களுக்காக மருத்துவமனையில் பதிவு செய்யும் இடம் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படுகிறது. இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் உடல்நலனிற்கு கேற்ப உள்நோயாளிகளாகவும், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கும் மருத்துவர்களின் ஆலோசனை படி 108 ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மேல்சிகிச்சைக்காக நோயாளிகள், உறவினர்களின் விருப்பப்படி சில சமயங்களில் தனியார் ஆம்புலன்ஸ்களிலும் கொண்டு செல்லப்படுகின்றனர். இதனால் விருதுநகர் அரசு மருத்துவமனையில் 12க்கும் அதிகமான தனியார் ஆம்புலன்ஸ்களும் செயல்பாட்டில் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நோயாளியை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக மருத்துவமனை ஊழியர்கள் 108 ஆம்புலன்சை அழைத்தனர். அதற்குள் நோயாளியின் உறவினர்கள் தனியார் ஆம்புலன்ஸ் அழைத்தனர். இதனால் மருத்துவமனை ஊழியர்களிடம் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சில நாட்களாக தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளே வந்து நோயாளிகள், உறவினர்களிடம் தங்களின் விசிட்டிங் கார்டுகளை பட்டுவாடா செய்து வருகின்றனர். இது குறித்து மருத்துவமனை ஊழியர்கள் தட்டிகேட்டால், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
இது போன்ற செயலில் ஈடுபடும் டிரை வர்கள், அதன் உரிமையாளர்கள் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களாக இருப்பதால் போலீசார் நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அராஜகத்தில் ஈடுபடும் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், தடுக்க தவறிய உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனை ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை முதல்வர் அனிதா கூறியதாவது:
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் உள்ளே மருத்துவமனை ஊழியர்களிடம் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் உள்ளே வந்து விசிட்டிங் கார்டு வழங்கியது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.