/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மம்சாபுரத்திற்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு தனியார் பஸ் இயக்கம்
/
மம்சாபுரத்திற்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு தனியார் பஸ் இயக்கம்
மம்சாபுரத்திற்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு தனியார் பஸ் இயக்கம்
மம்சாபுரத்திற்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு தனியார் பஸ் இயக்கம்
ADDED : அக் 04, 2024 04:12 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மம்சாபுரத்தில் மினி பஸ் கவிழ்ந்து நான்கு பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு போக்குவரத்து துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் 4 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் தனியார் பஸ் இயங்க துவங்கியது.
கொரோனா ஊரடங்கு முன்பு வரை ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை பஸ்கள் , தனியார் பஸ்கள் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மம்சாபுரம் வழியாக ராஜபாளையத்திற்கு தினமும் 48 நேரங்கள் இயங்கி வந்தது.
கொரோனா ஊரடங்கு முடிந்து மாமுல் வாழ்க்கை துவங்கிய நிலையில் பல அரசு, தனியார் பஸ்கள் தங்கள் ட்ரிப்புகளை கட் செய்து நேர்வழியில் இயங்கியது. இதனால் மம்சாபுரத்தில் மக்கள் பஸ்சிற்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்தி ஆட்டோக்கள் அதிகளவில் பயணிகளை ஏற்றி சவாரி அடித்தது.
கடந்த வாரம் மினி பஸ் கவிழ்ந்து 4 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து ரோட்டை அகலப்படுத்தவும், கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கவும், மம்சாபுரம் வழியாக பெர்மிட் வாங்கிய அனைத்து தனியார் பஸ்களும் மீண்டும் இயக்க வேண்டுமென மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, மோட்டார் வாகன ஆய்வாளர் பூர்ண லதா சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், தனியார் பஸ் உரிமையாளர்களை அழைத்து அனைத்து பஸ்களும் முறையாக இயங்க அறிவுறுத்தினர். மம்சாபுரத்திற்கு பஸ்கள் வந்து செல்லும் நேர கால அட்டவணை போர்டுகள் வைக்கப்பட்டது.
இதனையடுத்து ராஜபாளையத்தில் இருந்து மம்சாபுரம் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் தனியார் பஸ் ஒன்று தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளது. அனைத்து தனியார் பஸ்களும் மம்சாபுரத்திற்குள் வந்து செல்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

