/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
/
அருப்புக்கோட்டையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
அருப்புக்கோட்டையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
அருப்புக்கோட்டையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : டிச 20, 2024 02:23 AM
விருதுநகர்: மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லுாரியில் நாளை(டிச. 21) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை நடக்கிறது.
மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பு: இதில் எஸ்.ஆர்.எம்., யூனிவர்சிட்டி, இன்னோவல் மென்பொருள் நிறுவனம், அடையார் ஆனந்த பவன், ரிலையன்ஸ் ஜியோ, ராயல் என்பீல்டு, வி.வி.வி., இதயம் நல்லெண்ணெய், ஆனமலைஸ் டொயோட்டா போன்ற நுாற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி, ஐ.டி.ஐ., டிப்ளமோ ஆகிய கல்வி தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
விருப்பமுள்ள வேலைதேடுவோர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நேர்காணலில் பங்கேற்க அனைத்து கல்வி சான்றுகளின் நகல், ஆதார் நகல், ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இது முற்றிலும் ஒரு இலவச சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ளும் வேலை நாடுபவர்கள் http://forms.gle/JhQRWrrJFAjasnT88 கூகுள் பார்மை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேலையளிக்கும் நிறுவனங்கள் முகாமிற்கு பதிவு செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமின்னஞ்சல் முகவரிக்கு (vnrjobfair@gmail.com) தொடர்பு கொள்ளலாம். என்றார்.