/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களல் பணிகள் நடப்பதில் சிக்கல்! பல அலுவலகங்களுக்கு அலையும் மக்கள்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களல் பணிகள் நடப்பதில் சிக்கல்! பல அலுவலகங்களுக்கு அலையும் மக்கள்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களல் பணிகள் நடப்பதில் சிக்கல்! பல அலுவலகங்களுக்கு அலையும் மக்கள்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களல் பணிகள் நடப்பதில் சிக்கல்! பல அலுவலகங்களுக்கு அலையும் மக்கள்
ADDED : அக் 15, 2025 07:06 AM

மக்களின் கோரிக்கைகளை அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே உடனடி தீர்வு காண்பதற்காக 'உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்' களை அரசு நடத்தி வருகிறது. நகர்புற பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 13 துறைகள் மூலம் 43 சேவைக ளும், ஊரக பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் மக்கள் பெறக்கூடிய வகையில் நடத்தப்பட்டு வருகிறது.
ஜாதி சான்று, பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீடு அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு திருத்தங்கள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மக்கள் அலுவலகங்களை தேடி அலையாமல் மக்களை தேடி அந்த பகுதியிலேயே முகாம்கள் நடத்தப்பட்டு அதில் குறைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.
முகாம்கள் நடத்துவதில் பல நன்மைகள் இருந்தாலும், இதை நடத்தும் நகராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் பிற துறைகள் சேர்ந்த அலுவலர்கள் முகாம்கள் நடக்கும்போது கலந்து கொள்ள செல்வதால் அலுவலகங்களில் தினசரி பணிகள் செய்ய முடியாமல் போகிறது.
அலுவலகத்தில் வந்து முடிக்க வேண்டிய பணிகளுக்காக மக்கள் வந்து சென்று அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 3, 4 முகாம்கள் நடைபெறுவதால் அலுவலர்களின் கவனம் முழுவதும் இதில் இருப்பதால் அலுவலகத்திற்கு வந்து செல்ல முடியவில்லை.
தீபாவளி பண்டிகை என்பதால் ஒன்றிய அலுவலகங்களின் ஒப்பந்ததாரர்கள் முடித்த பணிகளுக்கு பில் தொகை மற்றும் பணிகளுக்கு கட்டிய டெபாசிட் தொகையை திரும்ப பெறவும் நடையாய் நடக்கின்றனர்.
அரசு பணம் ஒதுக்கினால் பில் பாஸ் செய்யப்படும் என அதிகாரிகள் கூறினாலும், டெபாசிட் தொகையை திரும்ப வழங்குவதிலும் தாமதம் ஏற்படுவதாக ஒப்பந்ததாரர்கள் புலம்புகின்றனர். ஊராட்சிகளில் பொதுமக்கள் தங்கள் தினசரி கோரிக்கைகளுக்காக அலுவலகங்களுக்கு நடையாய் நடக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் கூடுதல் பணியாளர்களை நியமித்து முகாம் பணிகளை கவனிக்கவும், தினசரி அலுவலக பணிகள் நடக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - -