ADDED : பிப் 14, 2025 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கூனம்பட்டியில் அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் வி.ஏ.ஓ. பாண்டி, நேற்று காலை சென்றபோது 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வைத்து மீண்டும் அனுமதிஇல்லாமல் சட்ட விரோதமாக பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுவதை கண்டறிந்தார்.
இதனையடுத்து கிருஷ்ணன்கோயில் போலீசார் அங்கிருந்த மணி மருந்து, பேன்சி ரகபட்டாசுகளை பறிமுதல் செய்தனர். பட்டாசுஆலை நிர்வாகத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.