/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கரிமூட்டம் தொழிலில் குறையும் லாபம்: புலம்பும் வியாபாரிகள்
/
கரிமூட்டம் தொழிலில் குறையும் லாபம்: புலம்பும் வியாபாரிகள்
கரிமூட்டம் தொழிலில் குறையும் லாபம்: புலம்பும் வியாபாரிகள்
கரிமூட்டம் தொழிலில் குறையும் லாபம்: புலம்பும் வியாபாரிகள்
ADDED : டிச 07, 2024 05:31 AM

காரியாபட்டி: கரி மூட்டம் தொழில் அதிகரித்து வருவதால் போதிய லாபம் கிடைக்கவில்லை என வியாபாரிகள் புலம்பி வருகின்றனர்.
காரியாபட்டி, நரிக்குடி பகுதியில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன. பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை செய்ய முடியாமல் சீமைக் கருவேல மரங்கள் வளர்த்து விற்பனை செய்வதை தொழிலாக கொண்டுள்ளனர்.
இப்பகுதியில் அதிகமான விறகு வெட்டும் தொழில் நடைபெற்று வருகிறது. விறகு ஒரு டன் ரூ. 3 ஆயிரத்து 500 வரை விற்பனையாகிறது. விறகு விற்பனையில் போதிய லாபம் இல்லாமல் கரி மூட்டம் தொழிலில் சிலர் ஈடுபட்டனர்.
துவக்கத்தில் ஒரு சிலரே கரி மூட்டம் தொழிலில் ஈடுபட்டதால் ஒரு கரி மூடை ரூ. 800 முதல் ஆயிரம் வரை விற்பனையானது. இதனால் ஏராளமானோர் கரி மூட்டம் தொழிலுக்கு மாறினர். வரத்து அதிகரித்ததையடுத்து கிராக்கி இன்றி போனது.
2 ஆண்டுகளுக்கு முன் வரை நல்ல லாபம் கிடைத்தது. தற்போது கூலி மிஞ்சினால் போதும் என இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வியாபாரிகள் புலம்பினர்.
வியாபாரி பெருமாள் கூறியதாவது:
ரூ. 13 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. ரூ. 11 ஆயிரம் வரை செலவு ஆகிறது. கூலி ஆட்கள் வைத்து பார்த்தால் அதுவும் மிஞ்சாது. வேறு வழியின்றி குடும்பத்தினர் இத்தொழில் ஈடுபட்டு வருவதால் கூலி மிஞ்சினால் போதும் என தொடர்ந்து செய்து வருகிறோம்.