/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தடை புகையிலை ரூ. 1. 20 லட்சம் அபராதம்
/
தடை புகையிலை ரூ. 1. 20 லட்சம் அபராதம்
ADDED : மார் 06, 2024 05:45 AM
விருதுநகர் : விருதுநகர் அருகே நந்திரெட்டியப்பட்டி, மூளிப்பட்டி, ஆவுடையாபுரம், சந்தரகிரிபுரம் பகுதிகளில் தடை புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு சீல், ரூ. 1. 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
விருதுநகர் அருகே நந்திரெட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கரப்பாண்டி, மூளிப்பட்டியைச் சேர்ந்தவர் ராவணன், ஆவுடையாபுரத்தைச் சேர்ந்தவர் காளியப்பன், சந்தரகிரிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜாக்கனி.
இவர்கள் தடை புகையிலை விற்றதை போலீசார், உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்து கடைகளுக்கு சீல் வைத்து, தலா ரூ. 25 ஆயிரம் அபராதம், உணவுப்பாதுகாப்பு சான்றிதழ் இல்லாமல் கடை நடத்தியதற்கு ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 1. 20 லட்சம் அபராதம் விதித்தனர்.

