/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் உயிர்வாழ் சான்று
/
தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் உயிர்வாழ் சான்று
ADDED : அக் 29, 2024 04:36 AM
விருதுநகர்: முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுசீலா செய்திக்குறிப்பு: மத்திய அரசு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி, மாநில அரசு, ராணுவ ஓய்வூதியதாரர்கள், இதர ஓய்வூதியதாரர்கள் நவ. 1 முதல் தங்கள் உயிர் வாழ் சான்றை சமர்பிக்கும் படி ஆணை பிறக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்று, தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேரில் சென்று உயிர் வாழ் சான்று சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, அஞ்சல் துறையின் சார்பில் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்த படியே, தபால்காரர்கள் மூலம் பயோமெட்ரிக் அல்லது பேஸ் ஆர்.டி., செயலி முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர் வாழ் சான்றை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், அலைபேசி எண், பி.பி.ஓ., எண், ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர் வாழ் சான்று சமர்ப்பிக்க முடியும். எனவே உயிர் வாழ் சான்றை பெற தங்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ளலாம். போஸ்ட் இன்போ செயலியை பதவிறக்கம் செய்து கோரிக்கையை பதிவு செய்யலாம், என்றார்.