/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சமாதான பேச்சுவார்த்தையை ஒத்திவைத்ததை கண்டித்து மறியல்
/
சமாதான பேச்சுவார்த்தையை ஒத்திவைத்ததை கண்டித்து மறியல்
சமாதான பேச்சுவார்த்தையை ஒத்திவைத்ததை கண்டித்து மறியல்
சமாதான பேச்சுவார்த்தையை ஒத்திவைத்ததை கண்டித்து மறியல்
ADDED : டிச 05, 2024 05:32 AM

ராஜபாளையம்: சிவகாமிபுரத்தில் பாதை பிரச்னை தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தையை 10 நாட்களுக்கு ஒத்திவைத்த வருவாய்த்துறையினரை கண்டித்து தாலுகா அலுவலகம் முன் மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
சத்திரப்பட்டி அருகே சமுசிகாபுரம் ஊராட்சி சிவகாமிபுரம் எம்.ஜி.ஆர் காலனிக்கான இரண்டு பாதையில் ஒன்று சுகாதார வளாகம் இடிப்பால் திறந்தவெளி கழிப்பிடமாகவும்மற்றொன்று ஆக்கிரமிப்பில் உள்ளது.
பாதையை அசுத்தப்படுத்துவதாக கூறி சிலர் வேலி அமைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாசில்தார் ராமசுப்பிரமணியம் தலைமையில் நேற்று சமாதான கூட்டம் நடந்தது.
முடிவு எட்டப்படாததால் 10 நாட்களுக்குப் பின் மறு கூட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக கூட்டம் நடத்த வேண்டும் என தாசில்தார் அலுவலகம் எதிரே மக்கள் மறியலில் ஈடுபட்டதால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசாரும் வருவாய்த் துறையினரும் நாளை மறுநாள் கூட்டம் நடத்தப்படும் என உறுதி அளித்ததை அடுத்து சமாதானம் ஆகினர்.