ADDED : பிப் 12, 2025 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டி அரியனேந்தலில் வசிக்கும் ஆதிதிராவிடர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
காரியாபட்டி பகுதியில் வீடு இன்றி தவித்தவர்களுக்கு அரியனேந்தலில் வீட்டு மனை வழங்கப்பட்டது. நூற்றுக்கு மேற்பட்ட ஆதி திராவிட மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. ஆத்திரமடைந்த ஆதிதிராவிட மக்களுடன், காமராஜர் காலனி அருந்ததியின மக்களும் சேர்ந்து பஜாரில் மதுரை அருப்புக்கோட்டை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். எஸ்.ஐ., ஷமிளா பேகம், போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தனர்.
இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

