/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீடு புகுந்து தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ADDED : அக் 25, 2025 01:18 AM
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்துாரில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக குடிபோதையில் வீடு புகுந்து தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். தாக்குதலை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 36 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேத்துார் பஸ் ஸ்டாண்ட் அடுத்து ஐந்து கடை பஜார் பகுதியில் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினர் இடையே தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதில் தகராறு ஏற்பட்டது. போலீசார் 5 பேரை எச்சரித்து அனுப்பினர்.
நேற்று முன்தினம் இரவு ரஞ்சித் 25, ஈஸ்வர பாண்டியன் 19, திலகராஜ் 21, ராஜபாண்டி 22, ராமச்சந்திரன் 30, 17 வயது சிறுவன் ஆகியோர் புகார் அளித்தவர்களின் வீட்டிற்கு சென்று தாக்கியதில் குட்டி 25, தினேஷ் 23, சூர்யா 27, சமுத்திரம் 56, வினோத் குமார் 27, என ஐந்து பேர் காயமடைந்தனர். ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர்
தாக்குதலில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தினரையும் கைது செய்யக்கோரி நேற்று காலை சேத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பெண்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் காலை 7:00 மணி முதல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி., பஸீனா பீவி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை. இதையடுத்து 10 பெண்கள் உட்பட 36 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர். 3 மணி நேரத்திற்குப்பின் போக்குவரத்து சீரானது.