/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் சம்பளம் கேட்டு தர்ணா
/
சிவகாசியில் சம்பளம் கேட்டு தர்ணா
ADDED : ஆக 14, 2025 02:25 AM

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்களுக்கு இரு மாதமாக ஊதியம் வராததை கண்டித்து பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி மாநகராட்சியில் பணிபுரியும் திட்ட பரப்பிரியாளர்களுக்கு தனியார் ஒப்பந்த நிறு வனத்தில் மூலமாக ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஊழியர்களுக்கு ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் இரு மாதமாக ஊதியம் வழங்கவில்லை. மேலும் ஆறு மாத காலமாக பி.எப்.,தொகை செலுத்தவில்லை மூன்றாண்டு காலமாக இ.எஸ்.ஐ., தொகை செலுத்தவில்லை.
எனவே இதனை கண்டித்து உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ., தொகை பி.எப்., தொகை வழங்க வேண்டும் என துாய்மை இந்திய திட்ட பரப்புரையாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கமிஷனர் சரவணன் அவர்களிடம், ஒப்பந்த நிறுவனத்திடம் பேசி ஊதியம் வழங்கவும், பி.எப்., இ.எஸ்.ஐ., தொகை செலுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதைத் தொடர்ந்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.